ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுக்கு கூடுதல் வரி - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
Additional taxes for India to end Russia Ukraine war US Vice President JD Vance
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தொடரும் போர், சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் இதுவரை எந்தத் தெளிவான பலனும் கிடைக்கவில்லை.இதனால், ரஷியாவுக்கு எதிரான அழுத்தமாக, அமெரிக்கா புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு, டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.இதற்கு இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.“இந்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி விலைகளை பாதிக்கும்” என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசியதாவது:“கடந்த சில வாரங்களில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டு வர சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தியா மீது 2-வது கட்ட வரி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.டிரம்ப் தீவிரமான பொருளாதார அழுத்தங்களை பயன்படுத்தி வருகிறார். இது ரஷியாவின் எண்ணெய் வர்த்தக வருவாயை குறைக்கும்.”
மேலும், அவர்,“ரஷியா கொலைசெய்தலை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து ரஷியா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும்” என எச்சரித்தார்.
இந்த அமெரிக்க முடிவு,இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.உலகளாவிய எரிசக்தி விலைகள் மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.அதேசமயம், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, புதிய அழுத்தங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Additional taxes for India to end Russia Ukraine war US Vice President JD Vance