பாகிஸ்தானின் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவருக்கு 14 ஆண்டு சிறை; ராணுவ நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத்திற்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள அந்நாட்டு ராணுவ நீதிமன்றம். 

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ராணுவ சட்டத்தை மீறிய வழக்கில் சிக்கிய பைஸ் ஹமீத், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் ஐஎஸ்ஐ தலைவராக இருந்தபோது மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர். பின்னர், ஆட்சி மாறி நவாஸ் ஷெரீப்பின் கட்சியினர் பதவிக்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து ஹமீத் செல்வாக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இவர், மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ராணுவச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக ஆகஸ்ட் 2024-இல் ராணுவம் அவரை கைது செய்து காவலில் எடுத்தது. அதாவது, டாப் சிட்டி வீட்டுத் திட்ட ஊழல் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, ராணுவ நீதிமன்றத்தில் அவர் மீது அதன்படி,  இன்று நடைபெற்ற விசாரணை முடிவில் ராணுவ நீதிமன்றம், பைஸ் ஹமீத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A military court has sentenced Pakistan's former ISI chief to 14 years in prison


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->