சீனாவை அலறவிட்ட சம்பவம்: 19 வயது காதலனை தாய்லாந்து மோசடி கும்பலிடம் விற்பனை செய்துள்ள 17 வயது காதலி..!
A 17 year old Chinese girl sold her 19 year old boyfriend to a Thai fraud gang
சீனாவில் 17 இளம்பெண் ஒருவர் தனது 19 வயது காதலனை, வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தாய்லாந்தில் மோசடி கும்பலிடம் விற்பனை செய்துள்ள சம்பவம் சீனாவை அலறவிட்டுள்ளது.
ஜோ என்ற பெண், காதலன் ஹுவாங்கிடம் சிறந்த வருமானம் கிடைக்கும் என்று கூறி, அவரை தாய்லாந்து அழைத்துச் சென்றுள்ளார். இதனை நம்பிய ஹுவாங்கும், காதலியுடன் தாய்லாந்துக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலை என்ற பெயரில், ஜோ தனது காதலனை மியான்மரில் இயங்கும் கால்சென்டர் மோசடி கும்பலிடம் ரூ.11 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

ஹுவாங்கை வாங்கிய அந்தக் கும்பல் கடத்தி வைத்து, தினமும் 20 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. அத்துடன், ஆன்லைன் மோசடி, போலியான முதலீட்டு வலைத்தளங்கள் போன்றவற்றில் மக்கள் ஏமாறச் செய்வது போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபடச் செய்துள்ளனர். இதனால், சுதந்திரம் இன்றி, மனிதாபிமானமற்ற சூழலில் அந்த இளைஞன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகன் கடத்தப்பட்டதை அறிந்த ஹுவாங்கின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை மீட்பதற்காக ரூ.41 லட்சம் மோசடி கும்பலுக்கு கொடுத்து, இளைஞனை மீட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, தன்னுடைய காதலனை விற்று பெற்ற ரூ.11 லட்சம் தொகையை பெற்ற, ஜோ சொகுசாகச் செலவு செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பணத்தில் விலையுயர்ந்த பொருட்கள், சொகுசு வாகனங்கள், மற்றும் பார்ட்டிகள் என பயன்படுத்தியுள்ளார்.காதலனை ஏமாற்றி விற்பனை செய்த காதலி ஜோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்ற மோசடி மற்றும் கடத்தல் சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நடப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A 17 year old Chinese girl sold her 19 year old boyfriend to a Thai fraud gang