8 வருட காதல்.. காதல் மனைவி கர்ப்பம்..! சகோதரி என தெரிந்ததும், இளைஞர் எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய விபரங்கள் ஏதும் குறிப்பிடாமல் சமூகவலைதளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கின்றார். அதில் எனக்கும், என்னுடைய கர்ப்பிணியான மனைவிக்கும் தந்தை ஒருவர் தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இதனை உறுதி செய்துக்கொள்ள இருவருமே தனித்தனியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். அப்பொழுது என்னுடைய மனைவி எனக்கு சகோதரி என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் இருவரும் 8 வருடமாக காதலித்து இந்த வருட ஆரம்பத்தில் திருமணம் செய்து கொண்டோம். இன்னும் சில மாதங்களில் எங்களுக்கு குழந்தையும் பிறக்கப் போகின்றது.

இப்பொழுது இந்த பிரச்சனை எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைக்கு மருத்துவ ரீதியான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா> உங்களுடைய அறிவுரை வேண்டும். மேலும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிறகும் கூட எங்களுடைய உறவில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பிரியக்கூடாது என உறுதியாக இருக்கின்றோம். இந்த விஷயத்தை அப்படியே யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாமா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பலரும் பலவிதமான அறிவுரைகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

"நீங்கள் தெரிந்து இந்த செயலை செய்யவில்லை. உங்களுடைய காதல் வலுவாக இருக்கின்றது. இருவரும் இதுபோலவே ஒருவரை ஒருவர் உறுதியாக காதலித்துக் கொண்டே இருங்கள். ஆனால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்." என்பது போல அறிவுரைகள் குவிந்து வருகின்றது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த விஷயம் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 years lover is his sister in England


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->