காசாவில் கொத்து கொத்தாக மடியும் அப்பாவி மக்கள்: 24 மணி நேரத்தில் 72 பேர் பலி, 174 பேர் படுகாயம்..!
72 killed and 174 injured in Israeli strikes on Gaza in 24 hours
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 முதல் தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக கடல் மற்றும் வான் வழித்தாக்குல் அதிகம் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என இரு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து மீண்டும் போர் மூண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 174 பேர் படுகாயமடைந்துள்ளதாக காயமடைந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-t6by8.png)
இந்த உயிரிழப்புகளை சேர்த்து போர் தொடங்கியதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,331 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,632 ஆகவும் அதிகரித்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
72 killed and 174 injured in Israeli strikes on Gaza in 24 hours