5 நிமிட வீடியோ கால்.. 36 லட்சம் காலி! 9 நாட்களில் விவாகரத்து கோரி நீதிமன்றம் ஏறிய சீன வாலிபர்! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞரான 'கு' என்பவருக்கு, அவரது பெற்றோர் தொடர்ந்து திருமண வற்புறுத்தல் அளித்து வந்தனர். இதனால் தப்பிக்க நினைத்து அவர் அவசர அவசரமாக எடுத்த ஒரு தவறான முடிவு, தற்பொழுது அவரை நீதிமன்றப் படிகளில் ஏற்றி நிம்மதியை இழக்கச் செய்துள்ளது.

அவசரக் கல்யாணமும் அடுக்கடுக்கான பொய்களும்:
பெற்றோர் நெருக்குதலால் உள்ளூர் திருமணத் தகவல் மையத்தில் ரூ.2,700 செலுத்திப் பதிவு செய்தார் 'கு'. அங்கு முதலில் அறிமுகமான மூன்று பெண்களும் இவரை நிராகரித்ததால், அந்த முகமை வேறு மாகாணத்தில் இருந்து 2 நாட்களில் பெண் தேடித் தருவதாக உறுதியளித்தது. அதன்படி, ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் அறிமுகம் செய்யப்பட்டார். அப்பெண்ணிற்கு எவ்வித கடனோ, குற்றப் பின்னணியோ அல்லது கடுமையான நோய்களோ இல்லை என அவரது சுயவிவரக் குறிப்பில் போலியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்பெண்ணுடன் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வீடியோ காலில் பேசிய 'கு', நேரில் சந்திக்காமலும் குடும்பத்தாரிடம் தீர விசாரிக்காமலும், முகமையை முழுமையாக நம்பி திருமணத்திற்குச் சம்மதித்தார்.

வெளிச்சத்திற்கு வந்த மோசடி:
மாபெரும் பண இழப்பு: பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வரதட்சணை மற்றும் திருமணத் தகவல் மையக் கட்டணம் என மொத்தம் சுமார் ரூ.36 லட்சத்தை 'கு'வின் குடும்பத்தினர் செலவிட்டுத் திருமணத்தை முடித்தனர்.

9-வது நாள் அதிர்ச்சி: திருமணமான 9 நாட்களில் மனைவியின் வங்கி விவரங்களைச் சரிபார்த்தபோது, அவருக்கு ரூ.13.9 லட்சம் கடன் இருப்பது தெரியவந்தது.

மறைக்கப்பட்ட உண்மைகள்: அவரது மொபைல் பணப் பரிவர்த்தனைக் கணக்கில் வேறொரு பெயர் இருந்ததோடு, தனக்குக் கல்லீரல் நொதி பாதிப்பு இருப்பதையும், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றும் திருமணத்திற்குப் பின் அப்பெண் கூறியுள்ளார்.

விவாகரத்து வழக்கும் விநோத திருப்பமும்:
ஏமாற்றமடைந்த 'கு' உடனடியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இங்குதான் அடுத்த ட்விஸ்ட் அரங்கேறியது.

மறுபுறம், ஏமாற்றிய திருமண முகமையோ தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்து, இது பணத்தைப் பறிப்பதற்காக இவர்களே நடத்தும் நாடகம் எனக் கூறுகிறது. பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவசரப்பட்டு, தீர விசாரிக்காமல் 5 நிமிட வீடியோ காலை நம்பிக் கல்யாணம் செய்துகொண்ட அந்த நபர், தற்பொழுது பெரும் பண இழப்புடன் நீதிமன்றப் படிக்கட்டுகளில் தவித்து வருகிறார். 'பதறிய காரியம் சிதறும்' என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5-Minute Video Call 36 Lakhs Gone Chinese Man Files for Divorce Just 9 Days After Hasty Marriage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->