16 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட 41 வயது பெண்! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவை சேர்ந்த பெண் (வயது 41) 16 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேற்கு கலிமந்தன் பகுதியைச் சேர்ந்தவர் மரியானா (வயது 41) இவர் அதே பகுதியில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் வசித்து வருபவர் லிசா. 

இவரது மகன் கெவின் (வயது 16) இவர் மரியானாவின் கடைக்கு அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக கெவின் மீது மரியானா தீவிர காதல் கொண்டு அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். 

தன்னைவிட 25 வயது சிறியவரை திருமணம் செய்ய கொடுக்க அவரது தாய் ஒத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் மரியானாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் லிசா தனது மகனை, அவரது தோழி மரியானாவுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து கொண்டனர். 

தற்போது சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்கள் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து இந்தோனேசியா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. 

இந்தோனேசிவில் ஆண்களின் திருமண வயது 19 ஆகும். ஆனால் கெவின் 16 வயது என்பதால் இருவரும் தனியாக இருக்க வேண்டும் என அந்நாடு உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

41 year old girl married 16 year old boy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->