பாகிஸ்தான் :: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து - 40 பேர் பலி - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பாகிஸ்தானில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் பலுசிஸ்தானின் மாகாண தலைநகரான குவெட்டாவில் இருந்து 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று இன்று காலை கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது லாஸ்பேலா பகுதி அருகே பேருந்து சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதி பள்ளத்துக்குள் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து லாஸ்பேலா மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஹம்சா அஞ்சும் கூறுகையில், விபத்தில் இறந்த உடல்கள் அடையாளம் காண முடியாதவை என்றும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், தெற்கு பாகிஸ்தானில் உள்ள நீர் தேங்கிய பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்ததில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

40 killed in Bus crash in southwest pakistan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->