150 தமிழர்கள் உட்பட 300 பயணிகள் கொழும்பில் புயல் தடையில்...! -விமான நிலையத்தில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு!
300 passengers including 150 Tamils stranded due storm Stuck airport 3 days
துபாயில் இருந்து 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்த ஒரு விமானம், இலங்கை வழியாக பயணம் செய்தபோது, கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது.

ஆனால், வங்கக் கடல் மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள டிட்வா புயல், கனமழையை ஏற்படுத்தி, விமானம் மற்றும் ரெயில் சேவைகளை முற்றிலும் பாதித்துள்ளது.
இதனால் இந்தியா செல்லும் விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.இதன் விளைவாக, 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகள் கடந்த 3 நாட்களாக விமான நிலையத்தில் சிக்கிய நிலையில் தவித்து வருகின்றனர்.
பயணிகளின் உரிமைகளுக்கு ஏற்ப போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய பயணிகள் தரப்பில் இருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
300 passengers including 150 Tamils stranded due storm Stuck airport 3 days