பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு - 2 பயங்கரவாதிகள் உட்பட 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பிரதான சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்களும், போலீஸ் தலைமையகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு பெண் உட்பட இரண்டு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பபட்ட காரை ஒட்டிச் சென்றுள்ளனர். போலீஸ் தலைமையகம் அருகே, போலீசார் அந்தக் காரை இடைமறித்து சோதனை செய்த பொழுது வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பினால் அப்பகுதியே அதிர்ந்தன. இந்நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பில் போலீசார் ஒருவர் மற்றும் காரில் இருந்த 2 பயங்கரவாதிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். போலீசார் 4 பேர் மற்றும் பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கார் குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died in car bomb blast near Pakistan Parliament


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->