போலாந்தில் 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு... 2500 பேர் வெளியேற்றம்...! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான போலந்தின், தென்மேற்கு நகரமான வ்ரோக்லாவில் ரயில்வே மேம்பாலம் அருகே கட்டுமானப் பணியின்போது இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத 250 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய வெடிகுண்டு நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து கட்டுமான இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த போலத்தின் ஆயுதப்படைகள், இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட ஜெர்மன் எஸ்.சி 250 வான்வழி குண்டு என்று தெரிவித்தனர். இந்நிலையில் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வெடிகுண்டை செயலிழக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் வெடிகுண்டுகளால் மனித உடல்நலம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதி அப்பகுதியிலுள்ள 2500 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து நகரம் முழுவதும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கையுடன் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2500 evacuted as 250 kg 2nd world war bomb found in poland


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->