குப்யான்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குப்யான்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை கைப்பற்றி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதனிடையே ரஷ்யாமிடமிருந்து முக்கிய நகரங்களை கைப்பற்றிய உக்ரைன் படைகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் கார்கீவ் மாகாணத்தில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள குப்யான்ஸ்க் நகரை உக்ரைன் படைகள் கைப்பற்ற நடந்த போது தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், குப்யான்ஸ்க் நகரை கைப்பற்றும் முயற்சியில் பெர்ஷோத்ரவ்னேவ் மற்றும் யாஹிட்னே பகுதிகளில் உக்ரைன் படைகளால் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதலும் ரஷ்ய படைகளால் முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் உக்ரைன் படையின் 2 பீரங்கிகள், 5 ராணுவ வாகனங்கள் மற்றும் 4 கார்கள் அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

220 Ukrainian soldiers died in Russian counter attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->