ரஷ்யா : எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்கு மாகாணமான இர்குட்ஸ்க்கில் அமைந்துள்ள அங்கார்ஸ்க் நகரில் அங்கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தினுடைய எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை எதிர்பாராத விதமாக ஆலையில் தீ்பிடித்து பரவ தொடங்கியது.

தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து சுமார் 2,500 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தீ பரவியதால் ஆலையின் முக்கிய பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகின. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் 

இந்த தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் இர்குட்ஸ்க் மாகாண கவர்னர் இகோர் கோப்ஸேவ் தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசுபாட்டால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து விசாரணையில், பாதுகாப்பு வரம்புகள் மீறப்பட்டுள்ளதா என்று புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died as fire accident in oil factory in russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->