விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் பெண்மணி யார் இவர்.? - Seithipunal
Seithipunal


முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா 1937ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது.

இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார்.

வோஸ்டாக்-6 (vostok-6) என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார்.

இவர் 'ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்" என்ற பதக்கம், 'லெனின் விருது" மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st women in space velentina tereshkova


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->