மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுவீச்சு தாக்குதல்: 19 மாணவர்கள் உயிரிழப்பு..!
19 students killed in military bombing of schools in Myanmar
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டு வீசி ஹக்குதல் நடத்தியதில் 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியான்மர் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. குறித்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக ராணுவத்துடன் போர் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அராகன் ராணுவத்தினருக்கும், மியான்மர் அரசு ராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது, கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு தனியார் பள்ளிகளின் மீது சுமார் 227 கிலோ வெடிமருந்துகளைக் கொண்ட வெடிகுண்டுகளைஅந்நாட்டு ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் போது 15 முதல் 21 வயதுடைய 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பாவி மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அராகன் ராணுவம் கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப், இது ஒரு கொடூரத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
19 students killed in military bombing of schools in Myanmar