மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி நிர்வாகி கைது!
Sexual harassment of student: Private school administrator arrested
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகியை போக்சோவில்போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துள்ளது .குறிப்பாக பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலில் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள் போக்சர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்தநிலையில் தென்காசி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகியை போக்சோவில்போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான சிமியோன் அப்பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் லிவி தனது தந்தையின் பள்ளிக்கூடத்தில் நிர்வாகியாக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லிவியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Sexual harassment of student: Private school administrator arrested