சட்டமன்ற கூட்டதொடரை 10 நாட்களாவது நடத்த வேண்டும்..MLA போர்க்கொடி!  - Seithipunal
Seithipunal


சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது கூட்டப்பட இருக்கின்ற சட்டமன்ற கூட்டதொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது நடத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் நேரு வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் நேரு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநில சட்டமன்ற கூட்டம் 18.09.2025 அன்று காலை தொடங்க இருப்பதாக சட்டபேரவை தலைவர் அறிவித்து இருக்கிறார். அந்த அறிவிப்பில் சட்டபேரவை கூட்டத்தின் போது ஒரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாகவும் அந்த மசோதாவில் இடம்பெற இருக்கும் சாரம்சத்தில் முக்கியமானதாக அதிகாரிகளிடம் கோப்புகள் தேங்கினால் நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில் மசோதா தாக்கல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது...
    
ஆனால் 18.09.2025 அன்று கூட்டப்படும் சட்டமன்றம் எத்தனை நாட்களுக்கு  நடத்தப்படும் என்று கூறப்படவில்லை. அதேநேரத்தில் இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதில் உள்ள நிறைகுறைகளை விவாதிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்று தெரியப்படுத்தவேண்டும். 
•    தற்போது புதுச்சேரியில் நிலவும் அசாதாரண நிலைமையான தரமற்ற குடிநீர்  விநியோகம் பிரச்சனைகள் பற்றியும்
•    வீதிகள் தோறும் நிலவும் குப்பைகள் அகற்றபடாத பிரச்சனைகள் பற்றியும்
•    நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள்இ ஓடைகளில்   மலக்கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சனைகள் பற்றியும் 
•    ஏழைஇ எளிய மக்கள் பயன்பெற கூடிய வீடுகட்டும் திட்டத்தின் மானியம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களின் பிரச்சனைகள் பற்றியும்
•    2022 ஆண்டு முதல் சென்டாக் மூலம் அளிக்கப்படும் காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது  பற்றியும்
•    2023 ஆண்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டில் உயர்கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்விக்கான அரசாணை    வெளியிடாமல் இருப்பது பற்றியும் 
•    அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும்
•    அரசு துறைகளில் நிலவும் காலிபணியிடங்கள் நிரப்பாதது பற்றியும்
•    அரசு வேலைவாய்ப்பில் படித்த இளைஞர்களுக்கு வயது தளர்வு வழங்காதது   பற்றியும்
•    அரசு பணியில் இருந்த போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு  அடிப்படையில் வேலை வழங்காமல் இருப்பது பற்றியும் 
•    சென்ற ஆண்டு ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 
அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருட்களை இழந்த மக்களுக்கு நிவாரணம்   வழங்காதது பற்றியும்
•    வர இருக்கின்ற மழைக்காலத்தை முன்னிட்டு  எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும்
•    நகர மற்றும் புறநகர பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனைகள் பற்றியும் 
•    அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழைஇ எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க உறுதிப்படுத்துவது பற்றியும்
•    வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா 
பயணிகளின் அடிப்படை பிரச்சனைகள் பற்றியும் 
•    
மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றியும் இதுபோன்று எண்ணற்ற பணிகளை பற்றி இன்னும் ஆறு மாதத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயலாற்றி பொதுமக்கள் பயன்பெற கூடிய வகையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண விவாதங்களில் சட்டபேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது கூட்டப்பட இருக்கின்ற சட்டமன்ற கூட்டதொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது தொடர்ந்து நடத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு  கேட்டுக்கொள்கிறேன் என சட்டமன்ற உறுப்பினர் நேரு வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The assembly session should be held for at least 10 days MLA battle banner


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->