திருச்சியில் இரு அமைச்சர்கள்... விஜய் சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது நின்று உரையாற்றினார்.

அவர் தனது உரையில் திமுக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போனதை சுட்டிக்காட்டி, “வாக்குறுதி அளித்து செய்தீர்களா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என குற்றஞ்சாட்டிய விஜய், பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயணம் கூட ‘ஓசி’ பயணம் என அவமானப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி அதையே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பரப்படுத்துவதாகக் கூறினார்.

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியும் காற்றில் கலந்துவிட்டது என அவர் வலியுறுத்தினார். சமீபத்திய கிட்னி திருட்டு விவகாரம் முறைகேடு என சொல்லி திமுக அரசு தப்பிக்க முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாததும், காவிரி நீர் பாயும் திருச்சியிலேயே குடிநீர் பிரச்சனை நீடிப்பதும் அரசு அலட்சியத்திற்கான சான்று எனவும் விஜய் கூறினார். மணல் கொள்ளையால் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் விமர்சித்தார்.

அதேபோல், அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்ற வாக்குறுதி எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பினார். டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என்ற வாக்குறுதியும் செயல்படவில்லை எனவும் தெரிவித்தார்.

“மக்கள் கேள்வி கேட்டாலும் பதில் வராது; ஆனால் வாக்குறுதி அளிப்பதில் மட்டும் ஆர்வம் அதிகம்” என்று அவர் உரையை நிறைவு செய்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay trichy election campaign DMK Minister


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->