தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி..சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!   - Seithipunal
Seithipunal


 

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் சாப்பிட்ட ஏராளமானூர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.  இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் முதல் அனைத்து கட்சிகளும் கடுமையாக விமர்சன செய்தவுடன் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்த கள்ளசார விவகாரத்தில் பல குடும்பங்கள் நிகர் கதியானது.இதையடுத்து  தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பல நபர்களை போலீசார் கைது செய்தனர்.  கள்ள சாராயத்துக்கு எதிராக தமிழக அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது காவல்துறையும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்தனர்.

 இந்த நிலையில்ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யபட்டு வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற  போலீசார் அப்புசாமி தோட்டத்தில் சோதனை செய்தபோது கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவர்  திமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பதும், மற்றொருவர் பெத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பதும் தெரியவந்தது.

மேலும், சுரேஷ்குமார் திமுகவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பெத்தாம்பாலையம் பேரூராட்சியின் 3வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராய விவகாரத்தில், ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பிரமுகரே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK administrator caught in the garden with illicit liquor How did it happen? Shocking news


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->