1.6 கோடி அமெரிக்கர்கள் சுகாதார பாதுகாப்பை இழக்கும் அபாயம்! - ஒபாமா
16 million Americans at risk of losing health coverage Obama
அமெரிக்க செனட் , அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு 'எலான் மஸ்க்' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்ப் அரசு, வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளது.
முன்னாள் அதிபர் ஒபாமா:
இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் தள பக்கத்தில், "மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்த மசோதாவை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
16 million Americans at risk of losing health coverage Obama