ஆர்மீனியாவில் ராணுவ தளத்தில் தீ விபத்து - 15 வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


ஆர்மீனியாவில் உள்ள ராணுவ தளத்தில் (வியாழக்கிழமை) நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்மீனியாவின் கிழக்கு மாகாணமான கெகர்குனிக் பகுதியில் உள்ள அசாத் கிராமத்தில் செயல்பட்டு வரும் ராணுவ தளத்தில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது. இந்த தீயானது மின்னல் வேகத்தில் அப்பகுதி முழுவதும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைகிடமாக உள்ளதாக ராணுவ தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி பெட்ரோல் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டது என்று ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சர் சுரேன் பாபிக்யன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 died in fire at military base in Armenia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->