ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 700 பேர் வெளியேற்றம்..!
13 killed in massive fire at Hong Kong apartment building
ஹாங்காங்கில் உள்ள தை போ (Tai Po) மாவட்டத்தில் இன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கரமாக தீப்பற்றியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
குறித்த தீ விபத்தில் 37 வயதான தீயணைப்பு படை வீரரும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த குடியிருப்பு வளாகத்திலிருந்து 700 பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ திடீரென பற்றி கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு இருக்கவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள வீடியோ காட்சிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அடர்த்தியான கரும்புகைகள் வெளிப்படுவது இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
13 killed in massive fire at Hong Kong apartment building