பாகிஸ்தான் : சந்தையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து - 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் லாஸ்பேலா நகரில் உள்ள வழக்கமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கொண்டிருந்த சந்தையில் எதிர்பாராத விதமாக கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.

இதைத் தொடர்ந்து கடையில் இருந்த மற்ற சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்ததால் அப்பகுதி அதிர்ந்தது. மேலும் கடையில் பற்றிய தீ நன்கு கொழுந்து விட்டு எரிந்து அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. இதனால் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின.

மேலும் இந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கராச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கேஸ் சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 died in gas cylinder explosion in Pakistan market


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->