பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 30 பேர் படுகாயம்..!
10 killed in bomb blast outside Pakistan paramilitary headquarters
பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடப்பெற்றுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 பேர் பலத்த காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் சர்கூன் சாலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதோடு, அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனால், நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அத்துடன், பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
10 killed in bomb blast outside Pakistan paramilitary headquarters