‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கரூரில் தவெக விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஜய்க்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் போஸ்டர் என தமிழகத்தில் பல இடங்களில் ஒட்டப்படுகின்றன.

இந்நிலையில், விஜய்யை அவரை விமர்சித்து ‘‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’’ என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், பலியானோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமல் விஜய் சென்னைக்கு சென்றது குறித்து விஜய் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’ என்னும் தலைப்பின் கீழ் நெரிசலில் பலியான அனைவரின் படங்களும் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதற்கு கீழே, ‘யார் முகம் பார்க்க காத்திருந்தேனோ, யாரை முதல்வராக்க உழைத்து, நசுங்கி, மூச்சடைத்து உயிர் துறந்தேனோ, அவரே என் முகம் பார்க்க வரவில்லையே!....’ என்றும் அதன் கீழ் மதுரை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay posters in Madurai create a stir


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->