தென்னாப்பிரிக்கா: எரிவாயு டேங்கர் லாரி வெடித்ததில் 10 பேர் பலி, 40 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஜோகன்னஸ்பர்க்கிற்கு கிழக்கே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க் கிழக்கே போக்ஸ்பர்க்கில் நேற்று காலை சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அந்த லாரியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த பயங்கர வடிவத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பாலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தம்போ நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில், பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், ஆறு தீயணைப்பு வீரர்களும் சிறு காயங்கள் ஏற்பட்டது என்று பிராந்தியத்தின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பயங்கர வெடி விபத்தால் அருகிலிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தம், இரண்டு வீடுகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எகுர்ஹுலேனியின் மேயர் டானியா காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed 40 injured in tanker lorry explosion in south africa


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->