பிரான்சில் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: 02 பலி ,192 பேர் காயம்: 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிப்பு..!
02 killed 192 injured in violence during football victory celebration in France
பிரான்சில் தலைநகர் பாரீஸ் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட மோதலில், இருவர் பலியாகியுள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும், இத்தாலியின் இன்டர் மிலன் அணியும் மோதின. இந்த போட்டியில், முதல்முறையாக பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி வெற்றிபெற்றது. இதனால் இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.நேற்று இரவு முழுவதும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது, வன்முறைகள் நடந்தன. இதன் போது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: வன்முறையால் நூற்றுக்கணக்கான தீ விபத்துகள் ஏற்பட்டது, இதில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்ட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 22 பேரும், 07 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாம்ப்ஸ் எலிசீஸில், பஸ் நிறுத்துமிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் மீது கற்களை வீசியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தடைகளை தாண்டி, குதித்தனர்.

அதன் போது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் அடித்து போலீசார் முயற்சித்தனர். இந்த வன்முறையில், இதுவரை 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 320 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
English Summary
02 killed 192 injured in violence during football victory celebration in France