நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன?
Which districts are likely to experience heavy rain tomorrow
சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது,"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வரும் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ந்தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 18-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Which districts are likely to experience heavy rain tomorrow