எச்சரிக்கை மணி! வறண்ட வானிலைக்கு இடையில் அதிர்ச்சி தகவல்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...!
Warning bell Shocking news amidst dry weather low pressure area formed Bay of Bengal
மாலத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், அதே நேரத்தில் பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி செயல்பட்டு வருவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன் எதிரொலியாக இன்று (06.01.2026) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் தோன்றலாம் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிய வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வருங்கால நாட்களில் வானிலை நிலவரம் திடீர் மாற்றத்தை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் சென்னை வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது,"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (06.01.2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் உருவாகலாம். அதிகபட்ச வெப்பநிலை 29–30° செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 21–22° செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
06.01.2026 முதல் 08.01.2026 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்; இடையிடையே இது 55 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 06.01.2026 முதல் 09.01.2026 வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இதேபோன்ற பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.இதனால், குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Warning bell Shocking news amidst dry weather low pressure area formed Bay of Bengal