சென்னை 540 கி.மீ தூரத்தில் ‘டிட்வா’...! நாளை வடதமிழகம் நோக்கி மழை வெள்ளம்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை கடற்கரை அருகே மெல்ல உருவாகி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலிமை சேர்ந்து ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக மாறி முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. நேற்று காலை 11.30 மணிக்கு புயலாக உருமாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இந்தப் புயலுக்கான பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்தது என்பதும் சிறப்பு.
தற்போது, டிட்வா புயல்
சென்னைக்கு சுமார் 540 கி.மீ தூரத்தில்
புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு-தென்கிழக்கில்
மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு–வடமேற்கு திசையிலாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


30ஆம் தேதி அதிகாலையில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரத்துக்கு மேல் உள்ள கடற்பரப்பைத் திரும்பத் தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழை நிலை–மாவட்ட வாரியாக
புயல் தொடரும் நிலையில் தமிழகம் பலத்த மழைக்கு தயாராக உள்ளது.
இன்று (வெள்ளி):
தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை
வட மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை சில பகுதிகளில் கன/மிக கன/அதி கன மழை சாத்தியம்
ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் கன முதல் மிக கனமழை
நாளை (சனி):
வடதமிழகம் முழுதும் மழை தாக்கம் அதிகரிக்கும்.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களில் மிக கன–அதி கன மழை எச்சரிக்கை.
சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கணிப்பு.
ஞாயிறு (ரெட் அலர்ட் நாள்):
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை – கடுமையான மழை தாக்கம்
வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை
கனமழை ஏற்படும் பகுதிகளுக்கு யெல்லோ அலர்ட் அமலில்.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
கடற்கரைக்கு அருகே இன்று & நாளை
தரைக்காற்று மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு & ஆந்திர கடற்கரை, மேற்கு வங்கக்கடல் பகுதியில்
அடுத்த 48 மணி நேரம்
50–80 கி.மீ வரை சூறாவளிக் காற்று
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tidwa 540 km away from Chennai Rain and floods towards North Tamil Nadu tomorrow


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->