தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு...!
Thunderstorms likely 7 districts Tamil Nadu till 1 pm today
தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதனால், இன்று தென்தமிழகத்தில் சில இடங்களில், வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை நாகப்பட்டினம், புதுக்கோட்டை,தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Thunderstorms likely 7 districts Tamil Nadu till 1 pm today