தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று மற்றும் நாளை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

24/02/2023 முதல் 26/02/2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லில் 15.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temperature will be higher than normal for 2 days in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->