ரெட் அலர்ட்.. ஆரஞ்சு அலர்ட்... மஞ்சள் அலர்ட்... எதற்காக விடுக்கப்படுகிறது? - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக கனமழை, மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. வானிலை குறித்த எச்சரிக்கையை குறிக்கும் விதமாக மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட்டை கேட்டு கொண்டு வருகிறோம்.

எதற்காக அலர்ட் விடுக்கப்படுகிறது?

பொதுவாக எச்சரிக்கை உணர்வை தூண்டுவதற்காக அலர்ட் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வானிலை குறித்த எச்சரிக்கை உணர்வை மக்களிடம் தூண்டுவதற்கு இந்த அலர்ட் முறை பயன்படுகிறது.

ரெட் அலர்ட் :

ரெட் அலர்ட், மிக மிக மோசமான வானிலை இருக்கும்பட்சத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். ரெட் அலர்ட் அறிவிக்கும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மக்கள் தங்களுடைய உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆபத்தான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு, மின்சார இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

ஆரஞ்சு அலர்ட் :

ஆரஞ்சு அலர்ட் என்பது கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

குறிப்பாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரும்.

இதுபோன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மஞ்சள் அலர்ட் :

வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிக்க மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது.

மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்து கொள்வது நல்லது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பச்சை அலர்ட் :

பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டால் பச்சை அலர்ட் விடப்படும்.

மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்பதால், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை அலர்ட் விடுக்கப்படுகிறது.

எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red orange yellow alert


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal