தென்மேற்கு பருவ மழை தொடக்கம்: கேரளாவில் 05 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் , 09 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து எச்சரிக்கை..!
Red alert issued for 05 districts in Kerala orange alert issued for 09 districts
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி, 16 ஆண்டுகளில் முதல்முறையாக, முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் நாளையதினம் (மே 25) 05 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 09 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேப்போல நாளை மறுநாள் (மே 26) காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதிகளில் 24 மணி நேரத்தில் 07 முதல் 20 செ.மீ வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், கோட்டயத்தில் உள்ள குமரகம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, மே 24-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Red alert issued for 05 districts in Kerala orange alert issued for 09 districts