மழை-காற்று கூட்டணி அட்டகாசம்! சென்னை மற்றும் திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்...!
Rain wind combination awesome Orange alert for Chennai and Thiruvallur
புயலின் தாக்கம் அதிகரித்து சென்னையை நேருக்கு நேர் நெருங்கிக் கொண்டிருப்பதால், நேற்று நள்ளிரவு தொடக்கம் மிதமான மழை பெய்துவரும் சூழல், இன்று அதிகாலை முதல் காற்றின் ஆவேசத்துடன் கூடிய கனமழையாக மாறியது.

இதனால் பள்ளி–கல்லூரி மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என நகரமே பயணப் பாதையில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
சுமார் 4 மணி நேரமாய் இடைவிடாமல் பெய்துவரும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் நீர்மயமாகி, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த தீவிர நிலை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவித்துள்ளது.
அதோடு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழை கொட்டும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
English Summary
Rain wind combination awesome Orange alert for Chennai and Thiruvallur