மொபைலில் சிம் இல்லாவிட்டால் வாட்ஸ்அப் இயங்காது...! - புதிய மத்திய அரசு விதி
WhatsApp will not work if there is no SIM mobile New central government rule
மத்திய அரசு சமீபத்தில் வாட்ஸ்அப் மற்றும் பிற மெசேஞ்சர் செயலிகளில் (டெலிகிராம், சிக்னல் போன்றவை) புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
இத்தகவல் படி, மொபைலில் இயங்கும் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு செயல்பட முடியாது.

மேலும், சிம் கார்டு 90 நாட்களுக்கு ஒரு முறை செயலியில் சரிபார்க்கப்பட வேண்டும், இல்லையெனில் கணக்கு செயல்பாடு முடக்கப்படும்.
அதேபோல், வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில், 6 மணி நேரம் கழித்து தானாக Logout ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி, செயலற்ற சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும், தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
English Summary
WhatsApp will not work if there is no SIM mobile New central government rule