மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Rain warning for 4 districts of Tamil Nadu till 1 pm Meteorological Department announcement
சென்னை வானிலை ஆய்வு மையம்,'தென்னிந்தியாவின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இதன் விளைவாக, இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளோடு மாநிலத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிற்கு மழை பொழியக்கூடும்' என அறிவித்துள்ளது.
மேலும், மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கடலூர்,தென்காசி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மேகங்கள் திரள, எப்போது வேண்டுமானாலும் சாரல் முதல் சற்று பலமான மழை வரை பொழியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Rain warning for 4 districts of Tamil Nadu till 1 pm Meteorological Department announcement