மக்களே உஷார்!!! இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை 'கோடை மழை' தீவிரமடைய வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு, வெப்பசலனம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தனியார் வானிலை ஆய்வாளர்கள், இன்று முதல் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலான ஒரு வாரத்துக்கு ''கோடை மழை'' தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் மழை என்பது மாலை, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையாக பெய்யக்கூடும்.மேலும் பகல் நேரங்களை பொறுத்தவரையில், வெப்பநிலை இயல்பைவிட 2° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வட, டெல்டா, மத்திய, தென் மாவட்டங்களில் இந்த மழைக்கான சூழல் அதிகமாக இருக்கிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

அதில் குறிப்பிட்டதாவது,"தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ந்தேதி வரை சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (வியாழக்கிழமை) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி,  சேலம்,ஈரோடு, நாமக்கல்,கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர்,  கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், கேரளாவை மையமாக வைத்து தொடங்கக்கூடிய தென்மேற்கு பருவமழைதான் கணக்கில் கொள்ளப்படும்.

அந்தவகையில் வழக்கமாக கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கக்கூடிய தென் மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே, அதாவது வருகிற 27-ந்தேதியையொட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People bewareThere possibility summer rains intensifying from today until 22nd


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->