கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடி திரு.பியரி கியூரி அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


 கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடி திரு.பியரி கியூரி அவர்கள் பிறந்ததினம்!.

மனிதகுல மேம்பாட்டிற்கான பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி 1859ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவர் 21வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை (Piezo Electric Effect) கண்டறிந்தார்.

இவர் காந்த குணங்களைக் கண்டறிவதற்காக முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். பிறகு காந்தப் பொருட்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவர் கண்டறிந்த விதிமுறையை கியூரி விதி எனப்படுகிறது.

 தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இவர்கள்தான் கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்கள். 

 கதிரியக்கத்தை கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தார். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு என்று குறிப்பிடப்பட்டது.

நோபல் பரிசு குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடியான பியரி கியூரி தனது 46வது வயதில் 1906 ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birth anniversary of the pioneer of radioactivity Mr Pierre Curie


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->