மக்களே உஷார்! கேரளாவின் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டையும் பாதிக்கிறது...!
People beware Kerala southwest monsoon is also affecting Tamil Nadu
தென்மேற்கு பருவமழை காலமான இந்த மாதத்தில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பாகவே இன்று ''தென்மேற்கு பருவமழை'' தொடங்கியுள்ளது.இதில் இந்திய வானிலை ஆய்வு மையம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியதாக அறிவித்துள்ளது.

மேலும், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மட்டுமல்லாமல், தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்றும்,மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதில்,கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
English Summary
People beware Kerala southwest monsoon is also affecting Tamil Nadu