தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
nov weather report in tamilnadu
இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 30.11.2020 தென் தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 1.12.2020 ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
nov weather report in tamilnadu