வாங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
low pressure area formed Bay of Bengal IMD
வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு மியான்மர் கடற்கரையை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காணப்பட்டது. இதுவே இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், அடுத்த 48 மணி நேரங்களில் இது மியான்மர்–வங்கதேச கடற்கரையை நோக்கி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம். எனினும், இந்த அமைப்பு தமிழகத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், மீனவர்கள் அடுத்த சில நாட்களில் கடல் நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதனால், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மேலும் வலுவடைந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் வருகிற வாரங்களில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
low pressure area formed Bay of Bengal IMD