உருவானது புதிய காற்றுழத்த தாழ்வு பகுதி!
IMD low depuration 24 10 2025
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் விளைவாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த சுழற்சி தாழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் உருவாகியுள்ள இது இரண்டாவது தாழ்வு பகுதி என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த சில நாட்களில் அந்தமான், நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இதன் திசை, தீவிரம் குறித்து தெளிவு கிடைக்கும் என்றும் மையம் கூறியுள்ளது.
இந்த மாற்றம் வடகிழக்கு பருவமழை செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
IMD low depuration 24 10 2025