சென்னைக்கு நெருங்கும் காற்றழுத்தம்...! - மெரினா கடற்கரைக்கு நுழைவு தடை...!
High pressure approaching Chennai Entry Marina Beach prohibited
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுத்து, தற்போது சென்னையிலிருந்து வெறும் 90 கிலோமீட்டர் தூரத்தையே மையமாகக் கொண்டுள்ளது.
இதே தாழ்வு மண்டலம் கடலூரிலிருந்து 110 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 90 கி.மீ., காரைக்காலிலிருந்து 180 கி.மீ. தொலைவில் மித மென அசைவுடன் நீடித்து வருகிறது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் போக்குவரத்து சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மழை தீவிரம் உயரும் வாய்ப்பை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
High pressure approaching Chennai Entry Marina Beach prohibited