டிட்வா தாக்கம்: எந்தெந்த மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு...?
ditwah impact Which districts likely receive rain till 1 pm
சென்னையை நோக்கி நகர்ந்த 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழ்ந்ததுடன், நகர் முழுவதும் இடைவிடாது கனமழையை கொட்டியது. தொடர்ச்சியான மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு, நகரின் பரபரப்பு முழுமையாக சீர்குலைந்துள்ளது.வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, சென்னையைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
நகர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மழை நீர் பெருக்கம் மற்றும் சாலை தடைகளை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
ditwah impact Which districts likely receive rain till 1 pm