மோந்தா புயல் பாதை மாற்றம்! - வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வுப் பகுதி உருவாகி வானிலை மாறுபாடு...!
Cyclone Mondhas path changes new depression formed Bay of Bengal causing change weather
வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதன் பின்னர் தென்கிழக்கு மாநிலங்களிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், சில நாட்கள் பரவலான மழை பொழிந்தது. இதேநேரம், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வலுத்து, புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் இது சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் கணித்தனர். ஆனால், பின்னர் அதன் திசை மாறி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்தது.அக்டோபர் 28ஆம் தேதி மாலை 6 மணியளவில், மோந்தா புயல் காக்கிநாடா கடலோரத்தை கடந்து சென்றது.
அந்த நேரத்தில், கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது; அதனுடன் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.இந்த புயலின் பாதிப்பு ஆந்திராவையே அதிகமாக தாக்கியதால், தமிழகத்திற்கு பெரிதாக மழை ஆதாரம் கிடைக்கவில்லை.இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று அறிவித்துள்ளது.
தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகளிலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ஆனால், இந்த அமைப்பு மியான்மர் திசை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் இதனால் குறிப்பிடத்தக்க மழை பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Cyclone Mondhas path changes new depression formed Bay of Bengal causing change weather