அடுத்த 7 நாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலுக்கு மழை வாய்ப்பு!
Chennai IMD Rain Alert Tamilnadu 20 April 2025
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியாவின் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் நிலையால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
21, 22 ஏப்ரல் 2025: இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும்.
23 முதல் 27 ஏப்ரல் 2025 வரை: ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை காணப்படலாம்.
சென்னை மற்றும் புறநகரங்கள்
21 மற்றும் 22 ஏப்ரல்: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36–37° செல்சியஸ், குறைந்தபட்சம் 29–30° செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
21-04-2025 முதல் 25-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இல்லை.
English Summary
Chennai IMD Rain Alert Tamilnadu 20 April 2025