மக்களே இதுக்கு அப்றம்தான் மழையே! வெளுத்து வாங்கப்போகும் கனமழை! - Seithipunal
Seithipunal


சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் முதல் வாரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இந்த தாழ்வு நிலை, வார இறுதியில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் வழியாக நவம்பர் இரண்டாம் வாரத்தில், தமிழகத்தை நோக்கி முன்னேற வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நவம்பர் 1ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம்.

நவம்பர் 2ஆம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brace for Heavy Rain Chance of Heavy Rains from 7th to 11th


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->