அரபிக்கடல் சுழற்சி தீவிரம்! - தமிழகத்தில் மழை அலர்ட், மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை...!
Arabian Sea circulation intensifies Rain alert Tamil Nadu severe warning fishermen
சென்னையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா அளித்த தகவலின்படி,"தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடையும் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் நான்கு இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது.
அவர் மேலும் தெரிவித்ததாவது,"அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் “காற்றழுத்த தாழ்வு மண்டலமாக” வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் தாக்கமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் வரும் 21ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மீனவர்கள் தொடர்பாக அமுதா எச்சரித்ததாவது,"அடுத்த 5 நாட்களுக்கு எந்தவிதத்திலும் கடலுக்கு செல்ல வேண்டாம். தற்போது ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடும் காற்று மற்றும் அலைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது” என எச்சரித்தார்.
English Summary
Arabian Sea circulation intensifies Rain alert Tamil Nadu severe warning fishermen