10 நாட்கள் மழை... 334 மரணம்...! - டிட்வா புயல் இலங்கை உயிரிழப்பு எண்ணிக்கையை உயர்த்தியது...! - Seithipunal
Seithipunal


டிட்வா புயலின் தாக்கத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இலங்கையில் இடையறாது கனமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக பல ஆறுகள் நிரம்பி வழிந்து, பெருநகரங்கள் உட்பட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

மழை தீவிரம் தொடர்ந்து அதிகரித்ததால் பல மலைப்பகுதிகளில் மக்களை பதறவைக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகள் அடியோடு இடிந்து மண்ணில் கலந்ததால், பலருக்கு தப்பியடைய கூட நேரமின்றி உயிரிழக்க நேரிட்டது.

நூற்றுக்கணக்கானோர் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்பு படையினர் தொடர்ச்சியாக தேடுதல்–மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 370 பேர் காணாமல் போன நிலையில் மீட்புப் பணியாளர்கள் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தையும் வீடுகளையும் இழந்து வெளியே தஞ்சம் தேடி அலைகின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 days of rain 334 deaths Cyclone DITWAH raises Sri Lankan death toll


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->